மதுரையில் பிரதமர் கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் விழா; தே.ஜ. கூட்டணியினர் நடத்தினர்
- 17 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரையில் மார்ச் 1ல் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும், தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழா, மதுரை ரிங்ரோடு மண்டேலா நகர் பகுதி மைதானத்தில் நேற்று நடந்தது.
பாஜ, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர் அதிமுக, முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பா.ஜ. சார்பில் மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பாலகணபதி, செயலாளர் கதலிநரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர்கள் மாரிசக்ரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் அ.மமு.க. சார்பில் டேவிட் அண்ணாத்துரை, த.மா.கா., சார்பில் பைரவமூர்த்தி, சிவசுந்தரம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகி திருமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Add Listing