திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி!
- 02 Mar 2026
- 264
- LOCAL EVENTS
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படையான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த 'முதல் பிரதமர்' என்ற பெருமையுடன், 15 நிமிடங்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து பிரதமர் மோடி வழிபட்டார். குமரனை மனமுருகி வழிபட்டார் காவி சால்வை, வெள்ளை வேட்டி அணிந்து மாலை 4:12 மணிக்கு வந்த மோடிக்கு, மேளதாளத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்தானிக சிவாச்சாரியார்கள் ராஜா, சந்திரசேகரன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
நேரடியாக மூலஸ்தானத்திற்கு சென்று குன்றத்து குமரனை மனமுருகி வழிபட்டார். அவரது பெயரில் பட்டர்கள் அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினர். தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது கொடிமரம் இருக்கும் மண்டபத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். கோயில் நிர்வாகம் தரப்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் இருந்து மாலை 4:32 மணிக்கு புறப்பட்டார். கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ, தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தனர்.
Add Listing