ஜவுளித்துறை கருத்தரங்கு
- 25 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினை கலைஞர்கள் சேவை மைய பெட்கிராட் எம்ப்ராய்டரி உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மதுரையில் கருத்தரங்கு நடந்தது
பெட்கிராட் பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள் ரூபி, குணசீலி, கண்ணன் முன்னிலை வகித்தனர். சேவை மைய நாகர்கோவில் பிரிவு உதவி இயக்குநர் வீணா குத்து விளக்கேற்றினார்.
கதர் கிராமத் தொழில்கள் ஆணைய திட்டம் குறித்து மண்டல இயக்குநர் செந்தில் ராமசாமி, பெண்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட சமூகநல அலுவ லர் காந்திமதி, அரசு திட்டம், மானியம் குறித்து தாட்கோ மாவட்ட அலுவலர் செலினா, வங்கி சேவைகள் குறித்து சவுத் இந்தியன் வங்கி நிதிசார்பு அலுவலர் மீனாட்சி சுந்தரி பேசினர்.
Add Listing