மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
- 25 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை மின்பகிர்மான பெருநகர் வட்டம் அரசரடியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இனிப்பு வழங்கினர். மின்வாரிய திட்டத் தலைவர் கண்ணன் செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் ராஜரத்தினம், நிர்வாகிகள் பெரியசாமி, கார்த்திக், விஜயராஜா, சிவபாலாஜி, சுபாஷ் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.மன்னாடிமங்கலத்தில் ஜெ, உருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிளைச் செயலாளர் ராஜபாண்டி தலைமை வகித்தார். ராமு முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பிரபாகரன், அழகுமலை, பாண்டி, காமாட்சி, கருப்பு, முப்புலி பங்கேற்றனர்.
மேலுார் ஆவலையபட்டி, அழகர் கோவிலில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ, தலைமையில் சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளி, அன்பு இல்லம் மாணவிகளுக்கு எழுதுப்பொருட்களை வழங்கினர். மேலுார், செக்கடியில் ஜெ. பேரவை செயலாளர் தமிழரசன், எம்.எல்.ஏ பெரியபுள்ளான் ஆகியோர் ஜெ., சிலைக்கு மாலை அணிவித்தனர். அவைத் தலைவர் ராஜேந்திரன், தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன். ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.திருப்பரங்குன்றம் மதுரை கிழக்கு மாவட்ட அதிமு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஜெ. படத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்தார்.
இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் செல்வகுமார், சேதுராமன், பாலா பங்கேற்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பாரி மதிய உணவு, திருநகர் செஷையர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், முருகன், ரவி, சசி, பாலமுருகன், பாண்டுரங்கன் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர் துரைதனராஜ், நகர் ஜெ. பேரவை செயலாளர் லட்சுமணன் பங்கேற்றனர். பன்னீர்செல்வம் அணி சார்பில் நடந்த விழாவில் எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். சோழவந்தான் கவுன்சிலர் கணேசன் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார. நகர் செயலாளர் முருகேசன், இளைஞரணி அழகர், வார்டு செயலாளர் மணி, நிர்வாகிகள் தங்கதுரை, பாண்டி,பிரதீப்,விக்கி, கோகுல், கற்பகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்
Add Listing