Add Listing
மதுரை:

மதுரை: அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத உடல்களை அகற்ற முடிவு

  • 12 Feb 2025
  • 264
  • LOCAL EVENTS

அரசு மருத்துவமனை பிணவறையில் 23 உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 7 உடல்களை அடையாளம் காணும் பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒருவரது உடல் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்

இறந்தவரின் உடலை கேட்டு உறவினர்கள் யாரும் முன்வராததால், அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு அவரது புகைப்படத்தை மாநிலம் முழுவதும் அனுப்பினர்.இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது: பிணவறையில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் இன்னும் மூன்று நாட்கள் பிணவறையில் வைக்கப்படும். அடையாளம் காணப்படாவிட்டால் காயமுற்ற உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும்.

சேதமடைந்த உடல்கள் மயானத்தில் புதைக்கப்படும், நல்லநிலையில் உள்ள உடல்கள் மருத்துவ மாணவர்களின் பயிற்சி பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.