கோயில் திருவிழாவை முன்னிட்டு - மாட்டு வண்டிப்பந்தயம்
- 17 Mar 2025
- 264
- LOCAL EVENTS
வெள்ளலுாரில் வல்லடிக்காரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாச்சியார் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராமலிங்கம் மற்றும் கிராமத்தார் சார்பில் மாட்டுவண்டிப் பந்தயம் நடந்தது.
பாகனேரி ஆனந்த பார்த்திபன், சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணன் முதல் பரிசு, கம்பம் திருமலை, கோட்டநத்தம் பட்டி மதியழகன் 2 ம் பரிசு, மணவாக்கிப்பட்டி வாசுதேவன், வெள்ளலுார் நிரஞ்சன் 3 ம் பரிசு, சூரத்துார் பட்டி இளவரசு, போடி வெண்ணிலா மாடுகள் 4 ம் பரிசை வென்றன.
பெரிய மாடு பந்தயத்தில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் நாட்டரசன் கோட்டை சீதையம்மாள், புலி மலைப்பட்டி முனிசாமி, ஆட்டுக்குளம் குருசாமி, கூடலுார் முருகேசன் ஆகியோர் மாடுகள் முறையே முதல் 4 பரிசுகளை வென்றன.சிறிய மாடு பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது.