கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- 18 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரோணிக்கம், பொருளாளர் ஜோஸ்பின் அமலா, செயலாளர்கள் சந்தனமாரி, நிர்மலாமேரி, பொன்சாந்தா முன்னிலை வகித்தனர். இ.கம்யூ, நகர் செயலாளர் சாமி துவக்கி வைத்தார். அரசுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயகணேஷ், ஏ.ஐ.டி.யூ.சி, ஜீவானந்தம், நிர்வாகிகள் மரியசெல்வம், சுதா உட்பட பலர் பங்கேற்றனர்.
துணை சுகாதார நிலையங்களில் கிராமப்புற மக்களின் நலவாழ்வு பாதுகாக்க ஒப்பந்த செவிலியர் நியமனத்தை கைவிட வேண்டும். தாய்சேய் நலப்பணிகளை ஒப்பந்த செவிலியர் செய்ததாக அறிக்கை வழங்குவதை கைவிட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பிரசவ கேஸ்களை 'சீமாங்' மையங்களுக்கு மாற்றுவதை கைவிட வேண்டும் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Add Listing