தமிழ்க்கூடல்
- 31 Jan 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை கல்லுாரி இணைந்து நடத்திய தமிழ்க்கூடல் நிகழ்ச்சியில் தமிழ்மொழி நேற்று இன்று -நாளைதலைப்பில் அருப்புக்கோட்டை சைவபானு சத் திரிய கல்லூரி தமிழ்த்துறை தலைவர் தனசுபா பேசினார்.
சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா பங்கேற்றார். பேராசிரியர் முனியாண்டி முன்னிலைவகித்தார். தமிழ் மொழியின்முக்கால பயணம் பற்றி பேசப்பட்டது. தேனி சின்னமனுார் மனோகரன் எழுதிய தேனி நாட்டுப்புறவியல் நுால், முத்துவிஜயன் எழுதிய கூரக்கடை சிறுகதை நுால், குறும்பட இயக்குநர் சுதாகர் ஜெயராமன் எழுதிய போதிமரத்தைக் காணவில்லை கவிதை நுால்,ராஜபிரபா எழுதிய நுரை ததும்பும் சொற்கள்-கவிதை நூல் வெளியிடப்பட்டன.
Add Listing