Add Listing
வண்டியூர்

வண்டியூர் மக்களுக்கு வண்டி வண்டியாய் பிரச்னையாம்

  • 05 Feb 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரை:பாதாளச் சாக்கடை திட்டம், மழை நீர் வடிகால் இல்லாமை, வண்டியூர் கண்மாய் பகுதி ஆக்கிரமிப்பு, குறுகலானதெருக்களில் தாறுமாறான ரோடுகள், பெயர்ந்து பரவிய கற்களால் வாகன போக்குவரத்து அவதி என வண்டியூர் மக்களுக்கு பிரச்னைகள் வண்டி வண்டியாய் நிரம்பியுள்ளது.

மதுரை மாநகராட்சி வார்டு 39 ல் வண்டியூர் மெயின்ரோடு பகுதி, யாகப்பாநகர், பாலாஜி நகர், திருவள்ளுவர் தெரு, அப்பாஸ் தெரு என பரந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு காலம் காலமாக நிறைவேறாத பிரச்னைகளால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

பாண்டியன் தெரு ரவி: ரேஷன் கடை இல்லாததால் பொருட்கள் வாங்க வெகு தொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்குள்ள கூட்டத்தால் நீண்ட நேரம் காத்திருந்து நாள், நேரம் விரயமாகிறது. எனவே எங்கள் பகுதிக்கு ரேஷன் கடை தேவை. தெருவில் வடிகால் வசதி இல்லாததால்மழைநீர் வீணாகிறது. தேங்கும் மழைநீர் பல நாட்களுக்கு வடியாமல் தேங்கியதால், கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெரு விளக்குகள் வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அச்சமுடன் நடமாடுகிறோம். திருவள்ளுவர் நகர், குறிஞ்சிதெரு பகுதியில் ரோடுகள் ஒழுங்கற்று உள்ளன. அம்ரூத் திட்டத்திற்காக பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் முடிந்து வெகு நாட்களாகியும் ரோட்டில் பேவர் பிளாக் கற்களை அமைக்கவில்லை. குறுகிய பகுதியில் மேடு பள்ளமாக இருப்பதால்வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.