Add Listing
தொட்டி

தொட்டி கட்டி 3 ஆண்டாச்சு பயன்பாடு என்னாச்சு

  • 26 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மேலுார் நா.கோவில்பட்டியில் ஒப்பந்ததாரர் மேல்நிலைத் தொட்டி, ஆழ்குழாய் அமைத்துவிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் மக்கள் குடிநீரை தேடி அலையும் அவலம் நிலவுகிறது.

நா.கோவில்பட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் இப்பகுதி மக்களுக்காக ஆனையப்பன் குளம் பகுதியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேலநிலை தொட்டி ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்டது அத்துடன் ரூ 550 இலட்சத்தில் ஆழ்குழாயும் அமைக்கப்பட்டது பணிகள் முடிந்து 1 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.அப்பகுதி பனையன் கூறியதாவது: மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வராததால் பாசனத்திற்கு பயன்படுத்தும் மோட்டார், கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்துகிறோம். பாசன நீரை பயன்படுத்துவதால் தொற்று நோய்களுக்கு ஆளாகிறோம். ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை. மக்களின் வரிப்பணம் ரூ.28 லட்சம் வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் மேல்நிலை தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

ஊராட்சி செயலர் இளையராஜா கூறுகையில், "ஆழ்குழாயில் இருந்து செம்மண் கலந்த நீர் வருவதால் மீண்டும் ஆழ்குழாயை போர்வெல் இயந்திரத்தை கொண்டு அலசி பிப் 28ல் தண்ணீர் வழங்கப்படும் என்றார்.