உலக சாதனை முயற்சியில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
- 16 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கலாகேந்திரா அறக்கட்டளை, தமிழ் இசை சங்கம் சார்பில் 10வது மஹா சிவராத்திரி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்பட 5 மாநிலங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட பாரம்பரிய நடனக் கலைஞர்கள் 24 மணிநேரம் இடைவிடாது நடனமாடுகின்றனர். நேற்று (பிப்.15) காலை 9 மணிக்கு தொடங்கி இன்று (பிப்.16) காலை 9 மணிக்கு முடிகிறது.
இந்த நடன நிகழ்வு ஸ்பாட்லைட் உலக சாதனை, உயர்தர புக் ஆப் வேல்டு ரெகார்ட் என 2 சாதனை பட்டியலில் இடம்பெற முயற்சிக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். சிறப்பு விருந்தினர்களாக கலாசார, சமூக ஆர்வலர் சாந்தி சர்வோத்தமன், மாவட்ட சுற்றுலா அதிகாரி உமாதேலி, ஓய்வு இந்திய வருவாய் அதிகாரி மோகன்காந்தி, அறங்காவலர் கிருஷ்ணன் நாட்டிய கலைஞர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளனர். தமிழ் இசைச் சங்க தலைவர் முத்தையா, மேலாளர் பழனியப்பன், மதுரை கலாகேந்திரா கலை, கலாசார அகாடமி இயக்குனர் அம்ஸ்னி ஏற்பாடு செய்தனர்.
Add Listing