காய்கறி சாகுபடியை விரும்பாத விவசாயிகள்
- 04 Feb 2026
- 264
- LOCAL EVENTS
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார மானாவாரி விவசாயிகள் காய்கறிகள் பயிரிட ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
நெல் அறுவடை முடிந்தபின் ஏராளமான விவசாயிகள் கத்தரி, மிளகாய், வெண்டை, அவரை, தக்காளி சாகுபடியில் ஈடுபடுவர். பலர் பருத்தி பயிரிடுவர்.
இந்தாண்டு போதிய மழை இன்றி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. வேலைக்கு ஆட்கள் கிடைக்காதநிலையும் உள்ளது. இதனால் விவசாயிகள் பலர் காய்கறி சாகுபடியிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
Add Listing