Namma Madurai App Namma Madurai App
புற்றுநோய் செல்களை அழிக்கும் 'இலக்கு சிகிச்சை
Back HEALTH NEWS
HEALTH NEWS

புற்றுநோய் செல்களை அழிக்கும் 'இலக்கு சிகிச்சை

72 days ago 04 Feb 2026

Share this story

மதுரை: ரத்தப்புற்றுநோயாளிகளுக்கு டார்கெட்டட் தெரபி' எனப்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் இலக்கு சிகிச்சையின் மூலம் பக்கவிளைவுகளை குறைக்கலாம் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்தப் புற்றுநோயியல் துறைத்தலைவர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு டாக்டர் காசி விஸ்வநாதன் கூறியதாவது: கீமோதெரபி சிகிச்சையில் நல்ல செல்களும் பாதிக்கப்படும். இந்த நவீன சிகிச்சையில் புற்றுநோய் செல்கள் மட்டும் அழிக்கப்படுகின்றன.உடலின் மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு குறைவு என்பதால் முதியோர், குழந்தைகள் இச்சிகிச்சையை எளிதாகத் தாங்கிக்கொள்ள முடியும். சிகிச்சைக்குப் பின் நோயாளிகளின் உயிர்வாழும் காலம், வாழ்க்கைத் தரம் அதிகரிக்கிறது. இலக்கு சிகிச்சை பெற்ற 7 பேரில் 5 பேர் முழு ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஐந்தில் 4 குழந்தைகள் புற்றுநோயி லிருந்து மீண்டு வருகின்றனர் என்றார்.
குழந்தைகளுக்கான ரத்தப்புற்றுநோயியல் நிபுணர்களான டாக்டர்கள் அன்னபூரணி, அனிதா, வெங்கடேஸ்வரன், மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் கலந்து கொண்டனர்.

Namma Madurai

Local News & Updates

More News