மதுரை: பாம்பனில் சிக்னல் பராமரிப்பு பணி நடப்பதால் மதுரை -- ராமேஸ்வரம் பாசஞ்சர் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று (மே 14) மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர், மண்டபத்துடன் நிறுத்தப்படும். நாளை அதிகாலை 5:45 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை பாசஞ்சர், மண்டபத்தில் இருந்து காலை 6:10 மணிக்கு புறப்படும். இரு ரயில்களும் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப் படுகின்றன.
Namma Madurai
Local News & Updates