Namma Madurai App Namma Madurai App
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..
Back SCHOOL NEWS
SCHOOL NEWS

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..

23 days ago 20 May 2026

Share this story

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025-26-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 6, 2026 வரை நடைபெற்றது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 25, 801 பேரும், சிறைவாசித் தேர்வர்களாக 395 பேரும் என மொத்தம் 9,09,002 பேர் எழுதினர். தமிழ்நாடு முழுவதும் 4,219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றன. ஆசிரியர்கள் தீவிரமாக மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அனைத்தும் கணினி முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20-ந் தேதி (இன்று) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால், சென்னை கோட் டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Namma Madurai

Local News & Updates

More News