Back
TRAFFIC&TRANSPORTATION
TRAFFIC&TRANSPORTATION
மதுரைக்கு நேரடி பயணம் – ஓகா சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!
165 days ago
03 Nov 2025
மதுரை: குஜராத் மாநிலத்தின் ஓகாவில் இருந்து மதுரைக்கான வாராந்திர சிறப்பு ரயிலை மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் நவம்பர் 3 முதல் 24 வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஓகாவில் இருந்து இரவு 10 மணிக்கு (ரயில் எண் 09520) புறப்பட்டு, வியாழக்கிழமை காலை 11.40 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மதுரையிலிருந்து மறுமார்க்கமாக நவம்பர் 7 முதல் 28 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை 4 மணிக்கு (ரயில் எண் 09519) புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிக்கு ஓகா சென்று சேரும்.
மதுரையிலிருந்து மறுமார்க்கமாக நவம்பர் 7 முதல் 28 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை 4 மணிக்கு (ரயில் எண் 09519) புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிக்கு ஓகா சென்று சேரும்.
இந்த ரயில் கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி மற்றும் ரேணிகுண்டா வழியாக இயங்கும். இதில் ஒரு ஏசி இரண்டடுக்கு படுக்கை பெட்டி, மூன்று ஏசி மூன்றடுக்கு படுக்கை பெட்டிகள், 10 ஸ்லீப்பர் பெட்டிகள், நான்கு பொது பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இடம்பெறும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (நவம்பர் 3) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (நவம்பர் 3) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
Namma Madurai
Local News & Updates