Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
கோயில் முன் தேங்கும் இறைச்சி கழிவுநீர்: பக்தர்கள் முகம் சுளிப்பு
10 days ago
07 Apr 2026
அலங்காநல்லுார் மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு ஊராட்சி அகல்யா வீதியில் மார்நாடு கருப்பு கோயில் முன் தேங்கும் இறைச்சி கழிவுநீரால் பக்தர்கள் முகம் களிக்கின்றனர். இவ்வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பள்ளி உள்ளது தெருவில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை இதனால் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல மற்றும் இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியின் நுழைவுப் பகுதி ரோட்டில் தேங்கி நிற்கிறது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
குடியிருப்பு வாசிகள் கூறியதாவது: மெயின் ரோட்டில் உள்ள கடைகளின், கழிவு நீரை கடையின் பின்பக்கம் சிறிய தரைமட்ட தொட்டிகளில் விடுகின்றனர். அவை நிரம்பி ரோட்டில் வழிந்தோடுகிறது. அப்பகுதி காலி மனைகளில் தேங்கியுள்ள மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் கொசு, விஷப் பூச்சிகளின் உற்பத்தி மையமாக உள்ளது கோயில் முன் இறைச்சிக் கழிவு நீர் தேங்குவது குறித்து ஊராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சமீபத்தில் அமைத்த தார் ரோடும் சேதமடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Namma Madurai
Local News & Updates