Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
பிளஸ் 2 தேர்ச்சியில் இந்தாண்டும் மாணவிகள் அசத்தல்: மாவட்ட தேர்ச்சி அதிகரிப்பு: மாநில 'ரேங்க்' குறைந்தது.
25 days ago
09 May 2026
அரவிந்த் மீரா மெட்ரிக் பள்ளி மாணவி சாரா, மற்றொரு தனியார் பள்ளி மாணவர் பிரணவ் தலா 595, தனியார் பள்ளி மாணவர் ராஜேஷ் 594, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவி பூரணா 593 மதிப்பெண்கள் பெற்றனர். மாவட்டத்தில் 111 அரசு பள்ளிகளை சேர்ந்த 3,777 மாணவர்கள் எழுதியதில் 9343 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டை விட 147 சதவீதம் தேர்ச்சி அதிகம் மாவட்ட மாதிரி பள்ளி மாணவர் அஜ்மல்கனி 576, மேலுார் பெண்கள் பள்ளி மாணவி நிகிதா 571, மாவட்ட மாதிரி மாணவி ஹேமமாலினி 571 மதிப்பெண்கள் பெற்றனர்.
பாடம்வாரியாக1269 பேர் 'சென்டம்' பாடம் வாரியாக அதிகபட்சமாக வேளாண் அறிவியலில் 377 பேர் நுாற்றுக்கு நுாறு பெற்றனர். கணிதம் 23, வேதியியலில் 15 பேர், குறைந்தபட்சமாக புவியியல், இயற்பியலில் தலா ஒருவர் என மொத்தம் 1269 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். தமிழ், ஆங்கிலத்தில் யாரும் 'சென்டம்' பெறவில்லை. 121 பள்ளிகள் சென்டம்' மாவட்ட மாதிரி, வில்லுார், பாரப்பத்தி, அவனியாபுரம் உட்பட 19 அரசு, 15 உதவி பெறும், 87 மெட்ரிக் என 121 பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்றன. அரசு பள்ளிகளில் கடந்தாண்டை விட 'சென்டம்' எண்ணிக்கை 11 அதிகரித்துள்ளது. 41 அரசு பள்ளிகள் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கல்வி மாவட்டம் அளவில் மதுரை 96.26 சதவீதம் பெற்று மேலுாரை (96.01 சதவீதம் ) முந்தியது. மாநில அளவில் 14 ரேங்கில் இருந்த மதுரை, தற்போது 16க்கு தள்ளப்பட்டது.
ஆசிரியர்களுக்கு பாராட்டு சி.இ.ஓ, தயாளன் கூறியதாவது: அரசு பள்ளிகள் தேர்ச்சி 1.47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், ஒரு மதிப்பெண் வினா பகுதியில் மட்டும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் தேர்வு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பாடங்களிலும் இருந்தும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. ஆர்வம் குறைந்த மாணவர்களை கண்டறிந்து ஜூனில் இருந்தே ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கற்பித்தனர். அரசு, மெட்ரிக் பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பால் இந்தாண்டு மாவட்டம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. அனைத்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் தேர்ச்சி குறைந்த பள்ளிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
Namma Madurai
Local News & Updates