திருப்பரங்குன்றம் மதுரை ஹார்விபட்டி, மேலுார் பகுதி கோயில்களில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஹார்லிபட்டி பாண்டுரங்கன் கோயிலில் மூலவர்களுக்கு புதிய விமானம் அமைக்கப்பட்டது.
கும்பாபிஷேக முதல்கால யாக சாலை பூஜை மார்ச் 4ல் துவங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீர், கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்பு மூலவர்கள் ருக்மாயி பாண்டுரங்க சுவாமி, விநாயகர், ஆண்டாள், துர்க்கை, ஆஞ்சநேயர், முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
Namma Madurai
Local News & Updates