Back
SCHOOL NEWS
SCHOOL NEWS
பத்தாம் வகுப்பு தமிழ்த் தேர்வு 607 'ஆப்சென்ட்'
138 days ago
12 Mar 2026
மதுரையில் நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 607 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டத்தில் 479 பள்ளிகளை சேர்ந்த 37 ஆயிரத்து 496 மாணவர்கள் 140 மையங்களில் (மத்திய சிறை உட்பட) தேர்வு எழுதினர். 558 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 'ஸ்கிரைப்' ஆசிரியர் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒரு மணிநேரம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
மொத்தம் 140 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2418 அறைக் கண்காணிப்பாளர்கள் உட்பட 3733 ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர். தேர்வை கண்காணிக்க சி.இ.ஓ., டி.இ.ஓ,க்கள் தலைமையில் 8 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சி.இ.ஓ., தயாளன் தலைமையில் டி.இ.ஓ,க்கள் செந்தில்குமார், கணேசன் உள்ளிட்டோர் பல்வேறு மையங்களில் தேர்வுப் பணிகளை கண்காணித்தனர். 645 தனித் தேர்வர்களில் 612 பேர் பங்கேற்றனர். 32 பேர் பங்கேற்கவில்லை.
Namma Madurai
Local News & Updates