Namma Madurai App Namma Madurai App
சிறுமிக்கு பிறவி ரத்தநாள குறைபாடு அறுவை சிகிச்சை அப்பல்லோ டாக்டர்கள் சாதனை
Back HEALTH NEWS
HEALTH NEWS

சிறுமிக்கு பிறவி ரத்தநாள குறைபாடு அறுவை சிகிச்சை அப்பல்லோ டாக்டர்கள் சாதனை

50 days ago 26 Feb 2026

Share this story

மதுரை தேனியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் அபூர்வ பிறவி ரத்தநாளக் குறைபாட்டை அறுவை சிகிச்சை செய்து மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள் சாதித்துள்ளனர்.
இரைப்பை, குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் கூறியதாவது சிறுமிக்கு வளர்ச்சி குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம் இருந்தது.பரிசோதனையில் அபூர்வமான பாதிப்பு இருப்பது தெரிந்தது. கல்லீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட வேண்டிய ரத்தம், அசாதாரண ரத்தநாள இணைப்பால் நேரடியாக இதயத்திற்குச் சென்றது உலகில் இதுவரை 300 பேருக்கே இதுபோன்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு 'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அல்லது வளர்ச்சித் தாமதம், உடல் நல பிரச்னை, சுவாசப்பிரச்னை ஏற்படும்.மருத்துவ குழுவால் கல்லீரலுக்குள் இருந்த அசாதாரண ரத்தநாள் இணைப்பு தடுக்கப்பட்டது. டாப்ளர் ஸ்கேன் மூலம் ரத்த ஓட்டம் சீரானது உறுதிப்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில் பாதிப்பைக் கண்டறிந்ததால் கல்லீரலுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீரமைத்து எதிர்கால சிக்கலைத் தவிர்க்க முடிந்தது என்றார்.
டாக்டர் ஜே. மதுசூதனன் கூறுகையில், "அப்பல்லோ மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது. சிறுமியின் கல்லீரல் செயல்பாடு இயல்பு நிலைக்குத் திரும்பியதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றார். தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் நிகில் திவாரி, இணை இயக்குநர் டாக்டர் கே. பிரவீன் ராஜன், மூத்த மேலாளர் கார்த்திக், காயத்ரி மெடிக்கல் சென்டர் பொது மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் உடனிருந்தனர்.

Namma Madurai

Local News & Updates

More News