Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சியில் மதுரை துாள் கிளப்புது அரசு பள்ளிகள் சாதனை மாநில 'ரேங்க்' முன்னிலை
13 days ago
21 May 2026
மதுரை:மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 94.91 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் முந்தைய ஆண்டு (93.93 சதவீதம்) விட 0.98 சதவீதம் அதிகரித்து மாநில ரேங்கிலும் மதுரை மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது. மாவட்டத்தில் 479 பள்ளிகளை சேர்ந்த 35,586 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வழக்கம் போல் மாணவர்களை (92.75 சதவீதம்) விட மாணவிகள் (97.02 சதவீதம்) 4.27 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 92.57, உதவி பெறும் பள்ளிகள் 94.66, மெட்ரிக் பள்ளிகள் 98.16 சதவீதம் தேர்ச்சி பெற்றன. வழக்கம் போல் இந்தாண்டும் மெட்ரிக் பள்ளிகளில் தேர்ச்சி முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுபோல் 68 அரசு, 21 உதவிபெறும், 107 மெட்ரிக் என 196 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 1.49 சதவீதம் கூடுதலாக அதிகரித்து சாதனை படைத்துள்ளன.
Namma Madurai
Local News & Updates