Namma Madurai App Namma Madurai App
விளைச்சல் இல்லா பகுதியில் நெல் கொள்முதல் மையம் விக்கிரமங்கலம் விவசாயிகள் குற்றச்சாட்டு.
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

விளைச்சல் இல்லா பகுதியில் நெல் கொள்முதல் மையம் விக்கிரமங்கலம் விவசாயிகள் குற்றச்சாட்டு.

4 days ago 13 Apr 2026

Share this story

சோழவந்தான்: விக்கிரமங்கலம் செக்கான் கோவில்பட்டியில் வியாபாரிகளுக்காக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் மையம் உள்ளது.பல பகுதிகளில் மையங்கள் திறக்க வலியுறுத்தியும் அமைக்கவில்லை என விவசாயிகள் குறைபட்டுக் கொள்கின்றனர். விளைச்சலே இல்லாத பகுதியில் வியாபாரிகளுக்காக மையம் துவக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
செக்கான் கோயில்பட்டி விவசாயி செல்லச்சாமி கல்புளிச்சான்பட்டி பெயரில் நெல் கொள்முதல் மையம் துவக்கி செயல்படுகிறது. கல்புளிச்சான் பட்டியில் அறுவடை முடிந்து 3 மாதங்களாகி விட்டது. அந்த விவசாயிகள் தற்போது கோடை சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்து வருகின்றனர் இதனால் இம்மையம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு இப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மானாவாரி நிலமாக இருப்பதால் பூக்கள் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. நெல் பயிரிடப்படுவதில்லை.
இங்கு நெல் கொள்முதல் மையம் அமைக்க அவசியமே இல்லை, திமு.க, நிர்வாகிகள் சிலரின் தலையீடால் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் சிலரது துணையுடன் இம்முறைகேடு நடக்கிறது வெளி மாவட்ட வியாபாரிகள் பலருடைய நெல் இங்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சந்தேகம் வராமல் இருப்பதற்காக இம்மையம் பகலில் செயல்படுவதில்லை. இரவில் மட்டுமே கொள்முதல் பணிகள் நடக்கிறது விவசாயிகளின் பெயரில் வியாபாரிகள் கொள்ளையடிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News