சோழவந்தான்: தேனுார் சேம்பர் ஜெ.ஜெ., நகரில் ஓராண்டுக்குள் குளியல் தொட்டி சேதமடைந்து காட்சிப்பொருளாக மாறியுள்ளது.
இங்கு மயானம் அருகே சில மாதங்களுக்கு முன்பு போர்வெல், பைப் லைன் அமைத்து சுற்றுச்சுவருடன் கூடிய குளியல் தொட்டி அமைக்கப்பட்டது. மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்வதற்கும், பொது சுகாதாரத்திற்கும் மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மின்மோட்டார் செயல்படாததால் தொட்டி பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. தொட்டியின் சுற்றுச்சுவர் இடிந்து, ஆங்காங்கே டைல்ஸ் கற்கள் சேதமடைந்தன. இதனால் குளியல்தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக மாறியுள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Namma Madurai
Local News & Updates