Namma Madurai App Namma Madurai App
இன்ஜி., விண்ணப்ப பதிவு துவக்கம்; 5 ஆண்டு கட் ஆப் வெளியீடு
Back COLLEGE NEWS
COLLEGE NEWS

இன்ஜி., விண்ணப்ப பதிவு துவக்கம்; 5 ஆண்டு கட் ஆப் வெளியீடு

29 days ago 05 May 2026

Share this story

தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. அண்ணா பல்கலையின் கீழ், 400க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், 2.54 லட்சத்துக்கும் அதிகமான, பி.இ. பி.டெக், பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. அந்த வகையில், 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், இன்ஜி, படிப்புக்கு, ஜூன் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதி இல்லாத மாணவ மாணவியர், தமிழகம் முழுதும், 110 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குழு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, எமிஸ் எண், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 தேர்வு பதிவு எண், உட்பட 16 ஆவணங்கள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டுகளில், இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்கள், கட் ஆப் மதிப்பெண்ணிற்கு, எந்த கல்லுாரியில், எந்த பாடத்திற்கு இடம் கிடைக்கும் என்பதை அறிய, ஐந்து ஆண்டுகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்கள் தனித்தனியே வெளியிடப்படும்.
ஆனால், நடப்பாண்டு, கடந்த ஐந்து ஆண்டு கட் ஆப் மதிப்பெண்களை மாணவர்கள் ஒப்பிட்டு பார்க்கும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல, ஒவ்வொரு இன்ஜி பாடப்பிரிவுகளிலும், எவ்வளவு மாணவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் சேர்ந்துள்ளனர் என்ற விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் சந்தேகங்களுக்கு 1800425010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

Namma Madurai

Local News & Updates

More News