Namma Madurai App Namma Madurai App
புற்றுநோய் சிகிச்சையில் புது கருவி; அரசு டாக்டருக்கு தங்கப்பதக்கம்
Back HEALTH NEWS
HEALTH NEWS

புற்றுநோய் சிகிச்சையில் புது கருவி; அரசு டாக்டருக்கு தங்கப்பதக்கம்

8 days ago 09 Apr 2026

Share this story

மதுரை கொச்சியில் பொது புற்றுநோய்க்கான பல்நோக்கு மேலாண்மை குறித்த சர்வதேச புற்றுநோய் மாநாட்டில், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி கதிரியக்க இயற்பியல் துறை உதவி பேராசிரியர் செந்தில்குமாருக்கு, சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மெட்டல் இல்லாத 3டி பிரிண்டிங் எச்.டி.ஆர், பிராக்கிதெரபி லாக்கிங் அப்ளிகேட்டர் கருவியின் பயன்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து செந்தில்குமார் கூறியதாவது:
புற்றுநோய் சிகிச்சையை மேலும் துல்லியமாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவிலும் மெட்டல் இல்லாத, 3 டி பிரிண்டிங் எச்.டி.ஆர், பிராக்கிதெரபி அப்ளிகேட்டர் கருவியை உருவாக்கினேன். இது கதிர்வீச்சு வழங்கும் துல்லியத்தை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கருவிகளில் உலோகக் கூறுகள் ஏற்படுத்தும் சி.டி. ஸ்கேன் படப்பிடிப்பு குறைபாடுகளை முழுமையாக நீக்குவதால், தெளிவான படங்கள் கிடைப்பதன் மூலம் துல்லியமான சிகிச்சை திட்டமிடல் சாத்தியமாகிறது வழக்கமான வணிகக் கருவிகளுடன் ஒப்பிடும்போது அவற்றின், 10 சதவீத செலவில் இக்கருவியை தயாரிக்க முடியும்.
கர்ப்பவாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயானது உறுப்புகளின் இருபக்கமும் பரவினால், இதுபோன்ற கருவியை பயன்படுத்தி துல்லியமான கதிரியக்கத்தின் மூலம் புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். டீன் அருள் சுந்தரேஷ் குமார் கூறுகையில், "இந்த புதிய கண்டுபிடிப்பு, புற்றுநோய் சிகிச்சையில், இந்தியாவில் உருவாகும் உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது," என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News