Namma Madurai App Namma Madurai App
மதுரை குன்றத்து தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அமைச்சரிடம் மனு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை குன்றத்து தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

50 days ago 08 Jun 2026

Share this story

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வழிகாண வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமாரிடம் திருப்பரங்குன்றம் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக அமைச்சர் நிர்மல் குமார் ஜூன் 6 ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவர் பாண்டியன் நகரில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், சில ஆண்டுளாக மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றிவருகின்றனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை 2025ல் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆண்டு 2026 கார்த்திகை தீபத்திருநாளன்று சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபத்தை ஏற்றி, மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Namma Madurai

Local News & Updates

More News