Namma Madurai App Namma Madurai App
தக்காளி விலை விவசாயிகள் கவலை
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

தக்காளி விலை விவசாயிகள் கவலை

44 days ago 04 Mar 2026

Share this story

திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் மானாவாரி பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இருக்கும் விவசாயிகளில் சிலர் தக்காளி பயிரிட்டுள்ளனர். இந்த விவசாயிகள் கூறியதாவது: தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.
தற்போது பழங்கள் வரத்துவங்கியுள்ளன. முன்பு நல்ல விலை கிடைத்தது. தற்போது 15 கிலோ பெட்டி ரூ. 60 முதல் ரூ.100வரையே விலை போகிறது. விலை மிக குறைவாக இருப்பதால் பலர் செடிகளிலேயே பழங்களை விட்டு விட்டனர். தக்காளியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் மாடுகளுக்கு உணவாக அளிக்க முடியவில்லை. விலை அதிகமாக விற்கும் பொழுது பொதுமக்கள் பாதிக்கப் படுகின்றனர்.
குறைவாக விற்கும் பொழுது விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம். காய்கறிகளுக்கு ஆதார விலையை அரசு நிர்ணயித்தால் மட்டுமே விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News