Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரைக்கு அவசியம் தேவை மெட்ரோ ரயில்: ரயில்வே தொழிற் சங்கங்கள் வலியுறுத்தல்
1 days ago
27 Jul 2026
போக்குவரத்த நெரிசல் மிகுந்த மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் தேவை என ரயில்வே
தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 27 கி.மீ., உயர்மட்டமாகவும், 4.65 கி.மீ., சுரங்கப்பாதையாகவும் அமைய உள்ளது. 23 ஸ்டேஷன்களுடன் ரூ.11,360 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போல் கோவையில் ரூ.10,740 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கியது. அதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதனை மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், கடந்த மே மாதம் மீண்டும் தமிழக அரசு பரிந்துரை செய்தது.

'மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள்தொகை இல்லை . மதுரை , கோவையில் மெட்ரோ ரயில் அமைந்தாலும் பயண நேரத்தில் முன்னேற்றம் ஏற்படாது. மாறாக விரைவான பஸ் போக்குவரத்தை அமைக்கலாம்' என மீண்டும் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.டி.ஆர்.இ.யூ., கோட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் கூறுகையில், ''தொழில்நுட்ப ரீதியாக காரணம் தெரிவிக்காமல் 2011 மக்கள் தொகை அடிப்படையில் திட்டம் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகலாம். அப்போதைய மக்கள் தொகை , போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்திருக்கும். எனவே நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.
எஸ்.ஆர்.எம்.யூ., கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் கூறுகையில், ''மதுரையில் நீடித்து வரும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வாக மெட்ரோ ரயில் திட்டம் அமையும். மதுரையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள உத்தரபிரதேசத்தின் கான்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசிடம் மாநில அரசு மீண்டும் வலியுறுத்தி மதுரைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வர வேண்டும்,'' என்றனர்.
Namma Madurai
Local News & Updates