Namma Madurai App Namma Madurai App
கிரிக்கெட் போட்டி
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கிரிக்கெட் போட்டி

1 days ago 02 Jun 2026

Share this story

சேது கிரிக்கெட் பவுண்டேஷன், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மதுரையில் சிட்டி சேலஞ்சர் சீசனுக்கான 16 வயதுக்குட்பட்டோர் பிரிவு மாநில கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
மதுரைக் கல்லுாரியில் நடந்த இறுதிப்போட்டியில் சேலம் சூப்பர் கிங்ஸ் அகாடமி 47.2 ஓவர்களில் 173 ரன் எடுத்தது. தானவ் 71 ரன் எடுத்தார். அஸ்வந்த் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய ஈரோடு டி.சி.ஏ., அணி 41.5 ஓவர்களில் 127 ரன்னுக்கு தோற்றது. நிதிஷ் 37, பசில் அகமது 30 ரன் எடுத்தனர். அஸ்வந்த் 3, ஆத்ரேயா 3 விக்கெட் வீழ்த்தினர்.
மூன்றாமிடத்திற்கான போட்டியில் மதுரை ஓ.சி.எப்., அணி 49.4 ஓவர்களில் 243 ரன் எடுத்தது. ஸ்ரீஹரி 95, தாசன் கார்த்திக் 41 ரன் எடுத்தனர். சகீம் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய பிரபாகரன் அணி 33.3 ஓவர்களில் 110 ரன்னுக்கு சுருண்டது. சரவணா 3, கவுதம் 3 விக்கெட் வீழ்த்தினர்.

Namma Madurai

Local News & Updates

More News