Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
குன்றத்து கோயிலில் தேர் முகூர்த்தம் தராசு முருகப்பெருமானுக்கு பூஜை
31 days ago
17 Mar 2026
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவுக்கான தேர் முகூர்த்தம், தேங்காய் தொடும் முகூர்த்தம், தராசு முருகப் பெருமானுக்கு பூஜை நேற்று நடந்தது.
கோயிலில் இருந்து மேளதாளத்துடன் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் அலுவலகம் சென்றனர். அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரத்திடம் தேங்காய் பழம், பங்குனி திருவிழா விவரங்கள் அடங்கிய குறிப்புகள் வழங்கி, திருவிழா நாட்கள் குறிக்கப்பட்டன
கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளிய கருப்பண சுவாமிக்கு யாக பூஜை நடந்தது. கோயில் முன்பு நிலை நிறுத்தியுள்ள பெரிய வைரத்தேரில் உள்ள விநாயகர், பெருமாள், சிவபெருமான், கருப்பண சுவாமி, தராசு முருகப்பெருமானுக்கு பூஜை. தீபாராதனை முடிந்து சுத்தியல், உளி ஆகியவற்றுக்கு பூஜை நடந்தது. மார்ச் 23 காலை 6.45 முதல் 7.15 மணிக்குள் பங்குனித் திருவிழா கொடியேற்றம் நடக்க உள்ளது.
Namma Madurai
Local News & Updates