Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
போஸ்ட் ஆபீசில் ஆதார் சேவை ஞாயிறுகளில் செயல்படுகிறது
154 days ago
24 Feb 2026
மதுரை: மதுரையில் உள்ள தலைமை போஸ்ட் ஆபீஸ்களில் வாரந்தோறும் ஞாயிறுகளில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது
அரசரடி, வடக்குவெளி, தல்லாகுளம் போஸ்ட் ஆபீஸ்களில் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரையும் ரயில்வே மெயில் சர்வீஸ் போஸ்ட் ஆபீசில் காலை 6.00 முதல் காலை 10:00 மணி வரை ஆதார் சேவை நடைபெறுகிறது.5 வயது, 15 வயது முடிந்தவர்களுக்கும் புதிதாக பதிவு செய்வதற்கும் கட்டணம் இல்லை. ஏற்கனவே உள்ள அட்டையில் பெயர் மாற்றம், முகவரி, பிறந்ததேதி, அலைபேசி, போட்டோ, பிற மாற்றங்களை பதிவேற்றம் செய்வதற்கு கட்டணம் உண்டு.
திருமண பத்திரிகை, உறவினர்களின் பெயர், முகவரி பட்டியலை மொத்தமாக கொடுத்தால் தபால் கவரில் பத்திரிகையை வைத்து ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவது வரை அனைத்து ஏற்பாடுகளும் குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது.
Namma Madurai
Local News & Updates