மதுரை வைகை ஆற்றில் மே 1ம் தேதி அழகர் இறங்குவதை முன்னிட்டு முதல்முறையாக தண்ணீரை மாற்று பாதையில் விட நீர்வளத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின் கூறியதாவது: வைகை அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் திறந்து விட்டால் மே 1ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது தண்ணீர் வந்துசேர தாமதமாகலாம் அல்லது தண்ணீர் வராமல் போய்விடும் வாய்ப்பு இருந்தது. நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின் கூறியதாவது: வைகை அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் திறந்து விட்டால் மே 1ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது தண்ணீர் வந்துசேர தாமதமாகலாம் அல்லது தண்ணீர் வராமல் போய்விடும் வாய்ப்பு இருந்தது.அலங்காநல்லுார் வரை வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் பின் சிறு கால்வாய்கள் மூலம் செல்லுார் கண்மாயில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.
கூடுதலாக மாடக்குளம் தடுப்பணையில் இருந்தும் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சேமிக்கப்பட்டது. மே 1ல் ஆற்றில் அழகர் இறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக தண்ணீரை திறந்து விட்டால் செல்லுார் கண்மாயில் இருந்து தாமதமின்றி தண்ணீர் கிடைத்து விடும். மதுரையில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறையில் வினாடிக்கு 500 முதல் 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். வைகை ஆற்றின் வழியாக தண்ணீரை திறந்தால் அதிகபட்சமாக 11 மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படும். தற்போது கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 7 மில்லியன் கன அடி தண்ணீரே போதுமானதாக உள்ளது. இதனால் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதற்கும் பொதுமக்கள் குளிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்றார்.
Namma Madurai
Local News & Updates