Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரையில் வெயிலுக்கு மத்தியில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி
20 hours ago
03 Jun 2026
மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸைத் தாண்டி பதிவாகி வந்தது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்த நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை தொடங்கியது. திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம், வில்லாபுரம், அவனியாபுரம், சிம்மக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், கோ.புதூர், மாட்டுத்தாவணி, எஸ்.எஸ். காலனி, கடச்சனேந்தல், விரகனூர், சிந்தாமணி, சாமநத்தம் மற்றும் யா.நரசிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 20 நிமிடங்கள் மிதமான மழையும் நீடித்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பதிவானது. கடும் வெயிலால் சுட்டெரிந்த மதுரைக்கு இந்த மழை இதமான சூழலை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். வானிலை மாற்றம் காரணமாக அடுத்த சில நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Namma Madurai
Local News & Updates