Namma Madurai App Namma Madurai App
ரேஷன் கடை அலுவலக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசு வழங்குவது எப்போது
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

ரேஷன் கடை அலுவலக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசு வழங்குவது எப்போது

41 days ago 07 Mar 2026

Share this story

மதுரை ரேஷன் கடைகளை நிர்வகிக்கும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிக்கு முன்பாக ஊதிய உயர்வு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எங்களுக்கு ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த காலக்கெடு ஜனவரியில் முடிந்த நிலையில், கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் செயல்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கான ஊதிய உயர்வு மார்ச் 5ல் வெளியிடப்பட்டது.
ரேஷன் கடைகளை நடத்துவதற்கான செலவினத்தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. 2022 முதல் 2025 வரை மானியத்தொகையை அரசு முழுவதுமாக விடுவிக்காததால் கடை சங்கங்களை பராமரிப்பது கடினமாக உள்ளது. மூன்றாண்டுகளுக்கான மொத்த மானியத்தில் ரூ.560 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என கூட்டுறவு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகையை தாமதமின்றி அரசு விடுவிக்க வேண்டும். ரேஷன் கடையை நிர்வகிக்கும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வெளியிடவில்லை.
அலுவலக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு பரிந்துரைப்பதற்காக இரண்டு மாதம் முன் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் மறு ஊதியம் நிர்ணயம் செய்வதற்கு குழு அமைக்கப் பட்டது. ஜனவரியில் மறு ஊதிய உயர்வு ஆணை வழங்கியிருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருமுன்பாக ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால் அலுவலக பணியாளர்கள் பயன்பெற முடியும் என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News