Namma Madurai App Namma Madurai App
கண்மாய் தகவல் தரமறுக்கும் பாலமேடு பேரூராட்சி நிர்வாகம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கண்மாய் தகவல் தரமறுக்கும் பாலமேடு பேரூராட்சி நிர்வாகம்

9 days ago 08 Apr 2026

Share this story

பாலமேடு கருப்பன்குளம் கண்மாயை சுற்றி ரூ.41 லட்சம் செலவில் கம்பி வேலி அமைத்த பணிகள் குறித்து ஆர்.டி.ஐ, யில் தகவல் தர பேரூராட்சி நிர்வாகம் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசின் அம்ருத் சரோவர் திட்டத்தை, நீர் நிலைகளை மேம்படுத்துதல், புனரமைத்தல், எதிர்காலத்துக்கு தண்ணீரை சேமித்தலை நோக்கமாக கொண்டு செயல்படுத்த வேண்டும். ஆனால் பாலமேட்டில் கண்மாயை சுற்றி முழுமையாக இல்லாமல் பெயரளவுக்கு கம்பி வேலி மட்டும் அமைத்துள்ளனர்
கண்மாயை சுற்றியும், உள்ளேயும் வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. கம்பி வேலி மட்டும் அமைத்து கடமையாற்றி உள்ளனர். இத்திட்டத்தில் நடந்த பணி குறித்து தகவல் பலகை எங்கும் வைக்கவில்லை. இதுபற்றி (ஆர்டிஐ) தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டாலும் தர மறுக்கின்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News