Namma Madurai App Namma Madurai App
குன்றத்து கோயிலில் வசந்த உற்ஸவம் துவக்கம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

குன்றத்து கோயிலில் வசந்த உற்ஸவம் துவக்கம்

12 days ago 22 May 2026

Share this story

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவம் நேற்று சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று மாலையில் சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பி, மேடையில் அமைத்திருந்த ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடந்தது.
இந்நிகழ்ச்சி மே 29 வரை நடக்கும். விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 30 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை பால் அபிஷேகம் செய்யப்படும்.
மே 31 காலையில் சுவாமி, தெய்வானை தங்கக் குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர். பின்னர் மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்

Namma Madurai

Local News & Updates

More News