Namma Madurai App Namma Madurai App
தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு அவதி
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு அவதி

50 days ago 26 Feb 2026

Share this story

சோழவந்தான்: மன்னாடிமங்கலத்தில் தெருநாய்களால் அவதியுறுவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்
சமூக ஆர்வலர் சரவணன் கூறியதாவது: இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊருக்குள் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. பல நேரங்களில் நடந்து, டூவீலரில் செல்பவர்களை துரத்திக் கடிக்கின்றன.
அடிக்கடி சண்டையிட்டு அவ்வழியே செல்லும் டூவீலர்களின் குறுக்கே விழுந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பெண்கள், முதியோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News