Namma Madurai App Namma Madurai App
பரவையில் பணிகளுக்கு பூஜை
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

பரவையில் பணிகளுக்கு பூஜை

52 days ago 24 Feb 2026

Share this story

வாடிப்பட்டி: மதுரை மேற்கு சட்ட சபை தொகுதி மேம்பாட்டு நிதியில் பரவை பேரூராட்சி, மேலமாத்துார் ஊராட்சியில் ரூ.74.70 லட்சத்தில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ துவக்கி வைத்தார். பரவை காந்தி மைதானத்தில் ரூ.12.70 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு, ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்ட, தாட்கோ காலனியில் ரூ.12 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க, புல்லுாத்து ரூ.38 லட்சத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது
பேரூராட்சி தலைவர் கலா மீனா, நகர் செய லாளர் ராஜா, துணைத் தலைவர் ஆதவன், அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர் முத்துப்பாண்டி, முன்னாள் மேயர் திரவியம், ஜெயராஜ், கவுன்சிலர்கள் சவுந்தரபாண்டி, கீதா, வின்சி, செபஸ்தியம்மாள், அலுவலகப் பணியாளர் வெங்கடேஷ் கட்சி நிர்வாகிகள் மனோஜ்குமார் ராஜ்குமார், ராஜூ பங்கேற்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News