மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து குமாரம், மணியஞ்சி வழியாக தண்டலை செல்லும் அரசு பஸ்கள் 2 மாதங்களாக வராததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த பஸ் தினமும் காலை 8:30 மணி, பின்னர் மதியம் 12:00, மாலை 5:00, இரவு 7:00 மற்றும் 10:00 மணி என தினமும் 5 முறை தண்டலை கிராமத்திற்கு வந்து சென்றது. இந்த பஸ்களை நம்பி தினமும் 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு மருத்துவமனை செல்வோர் பயனடைந்தனர். சில மாதங்களாக அடிக்கடி பஸ்களின் 'டிரிப்'கள் கட் செய்யப்பட்டன. இரு மாதங்களாக ஒரு நாளில் ஒரு முறை, அல்லது நினைத்த நேரத்திற்கு வந்து செல்வதாக கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
அவ்வூர் வீரணன் கூறியதாவது: எல்லீஸ் நகர் டிப்போவில் பஸ் முறையாக இயக்கப்படுவது இல்லை. இரவில் மாணவர்கள், தொழிலாளர்கள் 3 கி.மீ, பாதுகாப்பற்ற சூழலில் நடந்து வருகின்றனர். சில நேரங்களில் குமாரம் கிராமத்திலேயே பயணிகளை இறக்கி விடுகின்றனர். காரணம் கேட்டால் உரிய பதில் தருவதில்லை. அங்கிருந்து ஆட்டோ, டூவீலர்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Namma Madurai
Local News & Updates