Namma Madurai App Namma Madurai App
திருப்பரங்குன்றம் மலையில் மார்ச் 2ல் கிரிவலம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

திருப்பரங்குன்றம் மலையில் மார்ச் 2ல் கிரிவலம்

48 days ago 28 Feb 2026

Share this story

திருப்பரங்குன்றத்தில் மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல இருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறும் ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் நாளை மறுதினம், தடையை மீறி தீபம் ஏற்றுவோம்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்ததாக, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது
இதற்கு, காடேஸ்வரா சுப்ரமணியம் மறுப்பு தெரிவித்து, தன் விளக்கத்தை அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 'திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி தீபம் ஏற்றும் திட்டம் எதுவும் ஹிந்து முன்னணிக்கு இல்லை. லிங்க வடிவில் அமைந்திருக்கும், முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி, நாளை மறுதினம் கிரிவலம் செல்வோம் என பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளை மறுதினம் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

Namma Madurai

Local News & Updates

More News