Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
"அரோகரா" கோஷத்துடன் பால் குடம் எடுத்த வந்த பக்தர்கள்.
104 days ago
30 May 2026
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (மே 30) வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் அலகு குத்தி, பறவை காவடி எடுத்து அபிஷேகம் செய்வதற்கு ஊர்வலமாக அதிகாலை முதலே திருப்பரங்குன்றத்தை நோக்கி வந்தனர்.
திருக்கோவிலில் விசாக கொறடு மண்டபத்தில் பக்தர்கள் கொண்டு வரும் பால் சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அரோகரா கோஷம் கேட்கிறது.
Namma Madurai
Local News & Updates