Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மாமரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள் மழையை எதிர்நோக்கி விவசாயிகள்
148 days ago
02 Mar 2026
பேரையூர் தாலுகாவில் சாப்டூர், பழையூர், அணைக்கரைப்பட்டி, வண்டாரி, சந்தையூர் உள்ளிட்ட பகுதிகளில் மாமரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது மழை பெய்தால் தான் இந்த பூக்களில் ஈரம் பட்டு அனைத்தும் காய்களாக மாறும். இல்லாவிட்டால் வெப்பத்தால் பூக்கள் கருவி உதிர்ந்து விடும். எனவே மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இங்கு மகசூல் ஆகும் மாங்காய் மதுரை, தேனி, கேரளா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. மா மரங்களுக்கு எவ்வளவு தான் தண்ணீர் பாய்ச்சினாலும் மழை பெய்தால் தான் பூக்கள் உருவாகின்றன. இதேபோல் பூத்த பூக்களும் மழை பெய்தால் தான் காய்கள் ஆகின்றன இந்த இரண்டுக்கும் நடுவே சில நாட்கள் வெயிலும் வேண்டும் அந்தந்த நேரத்தில் மழை வெயில் சரியாக இருந்தால் தான் மகசூலை முழுமையாக தரும்
மா விவசாயிகள் கூறுகையில், "இந்தாண்டு அதிகமா பூக்கள் பூத்திருக்கின்றன ஒரு வாரத்திற்குள் லேசான மழை பெய்யாவிட்டால் பூக்கள் அதிகமாக உதிர்ந்து விடும். உதிர்ந்தால் போதியளவு மகசூல் கிடைக்காது இழப்புகளை சந்திக்க நேரிடும்' என்றார்.
Namma Madurai
Local News & Updates