Namma Madurai App Namma Madurai App
அமைச்சரின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி
Back CRIME & SAFETY NEWS
CRIME & SAFETY NEWS

அமைச்சரின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி

63 days ago 13 Feb 2026

Share this story

அவனியாபுரம்: அமைச்சர் மூர்த்தி ஜாதி வன்மத்துடன் பேசியதாக கூறி, அவரது உருவப்பொம்மையை மதுரை சின்ன உடைப்பு பகுதியில் சிலர் எரிக்க முயன்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில்,
சின்ன உடைப்பு பகுதியில் வீடுகளைக் காலி செய்ய அதிகாரிகள் முற்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு மாற்று இடம், கூடுதல் இழப்பீடு வழங்காமல் வெளியேற மாட்டோம் என அப்பகுதி மக்கள் சில நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் மதுரையில் நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மனு அளிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த அமைச்சர் மூர்த்தி, தங்களை ஒருமையில் பேசி, ஜாதி ரீதியிலான வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாக கூறியதாக நேற்று சின்ன உடைப்பு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், உருவப்பொம்மையை பறித்துச் சென்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News