Namma Madurai App Namma Madurai App
மதுரையில் ரூ.ஆறு கோடியில் உள்விளையாட்டு அரங்குகள் துணைமுதல்வர் துவக்கி வைத்தார்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரையில் ரூ.ஆறு கோடியில் உள்விளையாட்டு அரங்குகள் துணைமுதல்வர் துவக்கி வைத்தார்

42 days ago 06 Mar 2026

Share this story

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் அகாடமியின் கீழ் ரூ.6 கோடி மதிப்பிலான கபடி, டேபிள் டென்னிஸ் உள் விளையாட்டு அரங்குகளை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். மதுரையில் கடந்த நவம்பரில் சர்வதேச அளவிலான ஹாக்கி அரங்கு ரூ.20 கோடியில் திறக்கப்பட்டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடந்தது. தற்போது ரூ 12 கோடி மதிப்பில் 50 மீட்டர் நீளத்தில் சர்வதேச நீச்சல் குளம், டைவிங் நீச்சல் குளம் அமைக்கும் பணி நடக்கிறது.
ஒலிம்பிக் அகாடமியின் கீழ் ரூ6 கோடியில் உபடி, டேபிள் டென்னிஸ் உள்ளரங்குகள், ஆடவர், மகளிருக்கான நவீன ஜிம், டென்னிஸ், கூடைப்பந்து தரைத்தளம் சீரமைப்பு பணிகள் முடிந்தன நேற்று மதுரை வந்த துணைமுதல்வர் உதயநிதி கபடி உள்ளரங்கை திறந்து வைத்தார் மாணவர்களுக்கான முதல் கபடி நட்பு ரீதியான போட்டியை 'டாஸ்' போட்டு துவக்கி வைத்தார் தொடர்ந்து நவீன ஜிம் வளாகத்தையும் திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், விளையாட்டுத் துறை முதன்மை செயலாளர் சத்யபிரத சாரு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, கலெக்டர் பிரவீன் குமார், எம்.எல்.ஏக்கள் தளபதி, வெங்கடேசன். பூமிநாதன கலந்து கொண்டனர்.

Namma Madurai

Local News & Updates

More News