Namma Madurai App Namma Madurai App
குன்றத்தில் தேரோட்டம் இன்று தெப்பத் திருவிழா
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

குன்றத்தில் தேரோட்டம் இன்று தெப்பத் திருவிழா

154 days ago 14 Nov 2025

Share this story

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று(ஜன.29)தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம் நடந்தது.
சுவாமி, தெய்வானை ஜி.எஸ்.டி. ரோடு தெப்பக்குளம் கரையில் எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் யாகம் வளர்த்து பூஜை செய்து மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் ஊன்ற, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருள ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.

அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், தி.மு.க. வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி பங்கேற்றனர். இரவு சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று காலை 9.40 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.

Namma Madurai

Local News & Updates

More News