Namma Madurai App Namma Madurai App
கப்பலுார் டோல்கேட் தொடர்ந்து செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி உறுதி
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கப்பலுார் டோல்கேட் தொடர்ந்து செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி உறுதி

41 days ago 07 Mar 2026

Share this story

மதுரை கப்பலுார் டோல்கேட் அமைக்கும் போது, அந்த பகுதி திருமங்கலம் நகராட்சி எல்லை என்ற வரையறைக்குள் இல்லை 2018-ம் ஆண்டு தான் நகராட்சி எல்லைக்குள் உள்ள விதிகளின் கீழ் வந்தது இது குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கப்பலுார் டோல்கேட் தொடர்ந்து செயல்படும்" என தேசிய நெஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரி கோவிந்தசாமி தெரிவித்தார். மதுரையில் பத்திரிகை தகவல் மையம் நடத்திய நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 6806 கி.மீ. துாரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது மதுரை மண்டலத்தில் மட்டும் 2800 கி.மீ, நீள + வழிச்சாலைகள் உள்ளன தற்போது சென்னை மண்டலத்தில் 9 திட்டங்களும், மதுரை மண்டலத்தில் 8 திட்டங்களும் நடந்து வருகின்றன இதில் மதுரையில் இருந்து செட்டிகுளம், நத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது திருச்சி செல்லும் பயண நேரத்தை குறைப்பதற்கான கூடுதல் சாலையாகும். ஏற்கனவே மதுரையில் இருந்து திருச்சிக்கு 4-வழிச்சாலை உள்ளது திண்டுக்கல்லில் இருந்து கமலாபுரம், ஒட்டன்சத்திரம், மடத்துக்குளம் வழியாக பொள்ளாச்சிக்கு 4-வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணிகள் முடிந்தால் மதுரையில் இருந்து கோவை செல்பவர்கள் பொள்ளாச்சி வழியாக விரைவில் செல்ல முடியும்.
இந்த திட்டம் ரூ.4670 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் 4-வழிச்சாலை பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் இதில் புத்தேரி பாலம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில் நெடுஞ்சாலைகளில் அனைத்து பகுதிகளிலும் அலைபேசி சேவை கிடைக்கும். மதுரை-துாத்துக்குடி நெடுஞ்சாலை பராமரிப்பு தனியார் நிறுவனத்திடம் 15 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டது முறையாக பராமரிக்காததால், ஒப்பந்தத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

Namma Madurai

Local News & Updates

More News