Namma Madurai App Namma Madurai App
கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

26 days ago 02 Jul 2026

Share this story

மதுரையின் முக்கிய போக்குவரத்து நெரிசல் பகுதிகளில் ஒன்றான கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மேம்பாலப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம், நிலம் கையகப்படுத்தும் நிலை, போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளை எந்தவித தாமதமும் இன்றி விரைந்து முடிக்கவும், அதனைத் தொடர்ந்து மேம்பால கட்டுமானப் பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால், கோரிப்பாளையம், அழகர்கோவில் சாலை, மேலூர் சாலை, தல்லாகுளம் மற்றும் நகரின் வடக்கு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணிக்க இந்தத் திட்டம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Namma Madurai

Local News & Updates

More News