Namma Madurai App Namma Madurai App
கள்ளழகர் கோயில் நிலை உயர்வு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

கள்ளழகர் கோயில் நிலை உயர்வு

49 days ago 27 Feb 2026

Share this story

அழகர்கோவில் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உட்பட 17 கோயில்களின் நிலையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
பக்தர்கள் அதிகம் வருகை தரும் கோயில்களில் அடிப்படை வசதிமேம்பாடு. திருவிழாக்களை திறம்பட நடத்துதல், புகார்களுக்கு இடமளிக்காது நிர்வாகம் செய்தல் உள்ளிட்டவற்றுக்காக கோயில் செயல் அலுவலர் பணியிடம் தரம் உயர்த்தப்படுகிறது.அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் வருமானம், நில நிர்வாக மேலாண்மை நடவடிக்கை, பக்தர்கள்வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள 31 கோயில்களின் நிலையை உயர்த்த அரசுக்கு அறநிலையத்துறை சுமிஷனர் பரிந்துரைத்தார்.
அதில், வருமானஅடிப்படையில் கள்ளழகர் கோயில் உட்பட 17 கோயில்களின் நிலையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளழகர் கோயில் செயல் அலுவலர் பதவி, இணை கமிஷனராக நிலை உயர்வு பெறுவதால் தற்போதுள்ள துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் ஓரிரு வாரங்களில் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Namma Madurai

Local News & Updates

More News