Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
நீட் மறுதேர்வுக்கு அரசு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி
20 days ago
23 May 2026
அடுத்த மாதம் 21ம் தேதி, 'நீட்' மறுதேர்வு நடக்க உள்ள நிலையில், பள்ளிக் கல்வி துறை சார்பில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, குறுகிய கால நீட் பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 'வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் வாயிலாக, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளி மையங்களில், நாளை முதல், ஜூன் 11ம் தேதி வரை, மருத்துவ படிப்புக்கான 'நீட் நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 5,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக்கு பாடவாரியான பயிற்சிகளை, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வழங்கி, மாதிரித் தேர்வுகளை நடத்துவர் வகுப்புகள், காலை 09:00 மணி முதல், 04:30 மணி வரை நடக்கும்.
முகாமில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறுவதுடன், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், மதிய உணவு, காலை, மாலை சிற்றுண்டிகள் கிடைப்பதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
Namma Madurai
Local News & Updates